செல்வ மகள் சேமிப்புத் திட்டத்தில் இணைய சிறப்பு முகாம்; தேனி கோட்ட கண்காணிப்பாளர் தகவல்
தேனி : 'நவ.14' குழந்தைகள் தினத்தை முன்னிட்டு அனைத்து தபால் நிலையங்களிலும் நவ.30 வரை செல்வ மகள், செல்வ மகன் சேமிப்புத் திட்டங்களில் பொது மக்கள் கணக்கு துவங்குவதற்கான சிறப்பு முகாம் நடக்க உள்ளது.' என கோட்ட கண்காணிப்பாளர் குமரன் தெரிவித்துள்ளார்.அவர் கூறியிருப்பதாவது: தேனி தபால் கோட்டத்தில் உள்ள அனைத்து தலைமை, துணை, கிளை தபால் நிலையங்களில் நவ.30 வரை செல்வ மகள், செல்வ மகன் சேமிப்பு திட்டங்களை துவங்குவது தொடர்பாக சிறப்பு முகாம்கள் நடக்க உள்ளன. இதனால் பொதுமக்கள் தங்கள் 10 வயதிற்கு உட்பட்ட பெண் குழந்தைகளுக்கு செல்வ மகள் சேமிப்புத் திட்டத்திலும், ஆண் குழந்தைகளுக்கு செல்வ மகன் சேமிப்புத் திட்டத்திலும் கணக்குத் துவங்கி பயனடையலாம். இதில் குறைந்த பட்ச வைப்புத் தொகை ரூ.250 உடன் கணக்குதொடங்கலாம். தபால் நிலையங்களில் கணக்கு துவங்கலாம். கணக்கு துவங்கிய நாளில் இருந்து 15 ஆண்டுகளுக்கு டிபாசிட் செய்ய வேண்டும். சேமித்த தொகையில் 50 சதவீதம் உயர்படிப்புக்காக திரும்பப் பெறலாம். வட்டி, முதிர்வுத் தொகைக்கான வருமான வரி விலக்கு உண்டு. திருமணத்திற்கு ஒரு மாதத்திற்கு முன்பே கணக்கை முடித்துவிடலாம். நவ.,30 வரை முகாம் நடக்க உள்ளது. இந்த வாய்ப்பினை பொது மக்கள் பயன்படுத்தி பயன் பெறலாம் என்றார்.