உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / டூவீலர் மீது ஆட்டோ மோதி சிறப்பு எஸ்.ஐ., பலத்த காயம்

டூவீலர் மீது ஆட்டோ மோதி சிறப்பு எஸ்.ஐ., பலத்த காயம்

கம்பம் : கம்பம் மணிநகரத்தில் வசிப்பவர் மணிகண்டன் 52, இவர் கூடலூர் தெற்கு போலீஸ் ஸ்டேஷனில் சிறப்பு எஸ்.ஐ. யாக பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் கம்பத்தில் இருந்து தனது டூவீலரில் கூடலுாருக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது, இவருக்கு முன்னாள் ஆட்டோ ஒட்டி சென்றவர் திடீரென வலது பக்கம் திரும்பி, பின்னால் வந்து கொண்டிருந்த சிறப்பு எஸ்.ஐ. டூவீலர் மீது மோதியது. இதில்சிறப்பு எஸ்.ஐ., யின் தலை, கை, கால்களில் பலத்த காயம் ஏற்பட்டது. அருகில் இந்தவர்கள் அவரை மீட்டு கம்பம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். கம்பம் தெற்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி