மாட்டுபட்டி அணையில் அதிவேக படகு இயக்கவில்லை
மூணாறு : மாட்டுபட்டி அணை பகுதியில் மழை குறைந்தபோதும் அதிவேக படகுகள் இயக்கபடாததால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.மூணாறு அருகில் உள்ள மாட்டுபட்டி அணையில் மின்வாரியம் சார்பிலான ஹைடல் டூரிசம், மாவட்ட சுற்றுலா துறை சார்பில் அதிவேகம், குறைந்த வேகம், பேமிலி, பென்டன் ஆகிய வகை சுற்றுலா படகுகள் இயக்கப்படுகின்றன. அதில் அதிவேக படகுகள் மிகவும் பிரசித்தி பெற்றவை. அவை காற்று, மழை ஆகியற்றை பொறுத்து இயக்கப்படும்.நேற்று மழை குறைந்த நிலையில், அவ்வப்போது சாரல் மழை பெய்ததால் அதிவேக படகுகள் இயக்கப்படவில்லை. அதனால் பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். மாறாக குறைந்த வேகத்தில் செல்லும் 7 இருக்கைகளை கொண்ட பேமிலி படகு, 20 இருக்கைகள் கொண்ட பென்டன் படகு இயக்கப்பட்டன. அதனால் பயணிகள் சற்று ஆறுதல் அடைந்தனர்.