உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / கெட்டுப்போன மீன்கள் பறிமுதல்

கெட்டுப்போன மீன்கள் பறிமுதல்

தேனி : தேனியில் உணவுப்பாதுகாப்புத்துறையினர், நகராட்சி சுகாதார பிரிவினர் இணைந்து பங்களாமேடு, பாரஸ்ட்ரோடு, பழைய ஜி.எச்.ரோடு, சமதர்மபுரம், அல்லிநகரம் பகுதிகளில் செயல்படும் மின்கடைகளில் ஆய்வு நடத்தினர். இதில் ஒரு கடையில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த கெட்டுப்போன 5 கிலோ ஜிலேபி வகை மீனை பறிமுதல் செய்து அழித்தனர். விற்பனையாளருக்கு ரூ. ஆயிரம் அபராதம் விதித்தனர். வாரசந்தையில் மேற்கொண்ட ஆய்வில் தயாரிப்பு தேதி, காலாவதி தேதி அச்சிடாத இனிப்பு, கார வகைகள், அப்பளம் என 25 கிலோவை பறிமுதல் செய்தனர். இரு கடைகளுக்கு தலா ரூ. ஆயிரம் அபராதம் விதித்தனர். சுகாதாரமற்ற உணவுப்பொருட்கள் விற்பனை செய்யப்பட்டால் 94440 42322 என்ற எண்ணில் புகார் தெரிவிக்கலாம் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை