கல்லுாரிகளுக்கு இடையே விளையாட்டு போட்டி
தேனி,: தேனி நாடார் சரஸ்வதி கலை அறிவியல் கல்லுாரியில் கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலை கல்லுாரிகளுக்கிடையேயான உள்விளையாட்டரங்க போட்டிகள் நடந்தது. இதில் 10 கல்லுாரிகளைச்சேர்ந்த 88 பேர் பங்கேற்றனர். போட்டிகளை உறவின்முறைத் தலைவர் ராஜமோகன் துவக்கி வைத்தார். கல்லுாரி செயலாளர் காசிபிரபு, இணைச்செயலாளர்கள் செண்பகராஜன், அருண், கல்லுாரி முதல்வர் சித்ரா, பல்கலை உடற்கல்வித்துறை இயக்குனர் ராஜம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.செஸ் போட்டியில் கம்பம் ஆதிசுஞ்சனகிரி கல்லுாரி, தேனி நாடார் சரஸ்வதி கல்லுாரி முதலிரண்டு இடங்களை வென்றன. டேபிள் டென்னிஸ் போட்டியில் பெரியகுளம் ஜெயராஜ் அன்னபாக்கியம் கல்லுாரி, கம்பம் ஆதிசுஞ்சனகிரி கல்லுாரி அணிகள் முதலிரண்டு இடங்களை வென்றன. இறகுப்பந்து போட்டியில் கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலை அணி, கம்பம் ஆதிசுஞ்சனகிரி கல்லுாரி அணிகள் முதலிரண்டு இடங்களை வென்றன.