உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / மாநில பாக்சிங் அணித்தேர்வு

மாநில பாக்சிங் அணித்தேர்வு

தேனி : இந்தியப் பள்ளி விளையாட்டுக் கூட்டமைப்பு போட்டியில் பங்கேற்க உள்ள தமிழக பாக்சிங் அணித்தேர்வு தேனியில் நடந்தது. மத்திய அரசின் விளையாட்டு அமைச்சகத்தின் கீழ் இந்தியப் பள்ளி விளையாட்டுக் கூட்டமைப்பு(SGFI) செயல்படுகிறது. இந்த அமைப்பு சார்பில் ஆண்டு தோறும் தேசிய அளவில் போட்டிகள் நடத்தப்படுகின்றன. வெற்றி பெறும் மாணவர்கள், அணியில் இடம் பெறும் மாணவர்கள் சர்வதேச போட்டிகளில் இந்திய அணி சார்பில் பங்கேற்கின்றனர். இந்தாண்டு எஸ்.ஜி.எப்.ஐ., போட்டிகள் அருணாச்சல பிரதேசத்தில் அக்.27ல் துவங்குகிறது. இதற்கான தமிழக அணித்தேர்வு தேனி முத்துத்தேவன்பட்டி டி.எம்.எச்.என்.யூ., மெட்ரிக் பள்ளியில் நடந்து வருகிறது. தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து மாணவர்கள் பெற்றோருடன் பங்கேற்றனர். நேற்று மாணவர்களுக்கு 14, 17, 19 வயதிற்கு உட்பட்ட பிரிவுகளில் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை