மாநில அளவிலான மாதிரி வழக்காடும் போட்டி
தேனி : தேனி அரசு சட்டக்கல்லுாரி வளாகத்தில் மாநில அளவிலான மாதிரி வழக்குவாதப் போட்டி தமிழ் மொழியில் நடந்தது. இப்போட்டியின் துவக்க விழாவில் முதல்வர் சண்முகப்பிரியா வரவேற்றார், ஸ்ரீவில்லிப்புத்துார் மேகமலை புலிகள் காப்பகத்தின் உதவி வனப்பாதுகாவலர் சாய்சரண்ரெட்டி தலைமை வகித்தார். நிகழ்வில் பேராசிரியர்கள், நிர்வாகப் பணியாளர்கள், கவுரவ விரிவுரையாளர்கள், கல்லுாரி மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். 3 நாள் நிகழ்ச்சிகளில் தமிழ் வழி மாநில அளவிலான மாதிரி வழக்காடும் போட்டி நடந்தது. இதில் மாநிலம் முழுவதிலும் இருந்து 16 கல்லுாரிகளை சேர்ந்த 48 சட்டக் கல்லுாரி மாணவ, மாணவிகள் பங்கேற்று தங்கள் திறன்களை வெளிப்படுத்தினர். உதவி பேராசிரியர் பிரவீன் நன்றி கூறினார். இன்று நிறைவு விழா நடக்கிறது.