உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / மாநில குடியரசு தின குழு விளையாட்டு போட்டி நிறைவு

மாநில குடியரசு தின குழு விளையாட்டு போட்டி நிறைவு

தேனி : மாவட்டத்தில் நடந்து வந்த மாநில அளவிலான 14 வயதிற்குட்பட்டோர் குழு விளையாட்டு போட்டிகள் நிறைவடைந்தன.பள்ளிக்கல்வித்துறை சார்பில் பள்ளி மாணவர்களுக்கு குடியரசு தின தடகளம், குழு விளையாட்டுப்போட்டிகள் 14,17,19 வயதிற்குட்பட்டோர் பிரிவில் நடத்தப்படுகிறது. இதில் 14 வயதிற்குட்பட்டோருக்கான 12 குழு விளையாட்டுப்போட்டிகள் தேனி மாவட்டத்தில் பிப்.,6ல் துவங்கியது. மாணவிகளுக்கான போட்டிகள் பிப்.,8 ல் முடிந்தது. மாணவர்களுக்கான போட்டிகள் பிப்.,9ல் துவங்கி நேற்று நிறைவடைந்தது. இந்த போட்டிகளில் 38 மாவட்டத்தை சேர்ந்த அணிகள், விளையாட்டு விடுதி அணிகள் என ஒவ்வொரு போட்டியிலும் 40 அணிகள் பங்கேற்றன. தலா 5100 மாணவர்கள், மாணவிகள் என 10ஆயிரத்திற்கும் அதிகமானோர் போட்டிகளில் பங்கேற்றனர்.போட்டிகளில் வெற்றி பெற்ற முதல் இரு அணிகள் விபரம்: கபடி திண்டுக்கல், தேனி. ஹாக்கி ராமநாதபுரம், சிவகங்கை. கைப்பந்து சேலம், துாத்துக்குடி. கால்பந்து சென்னை, சேலம். கூடைப்பந்து மதுரை, கோவை. வாலிபால் தஞ்சை, சேலம். எறிபந்து விருதுநகர், துாத்துக்குடி. கோ-கோ சிவகங்கை, ஈரோடு. இறகுப்பந்து (ஒன்றையர்) கன்னியாகுமரி, கோவை. (இரட்டையர்) மதுரை, திருவள்ளூர். பால் பேட்மிட்டன் திருச்சி, மயிலாடுதுறை.டேபிள் டென்னிஸ் (ஒற்றையர்) செங்கல்பட்டு, சென்னை. (இரட்டையர்) திண்டுக்கல், தேனி. டென்னிஸ் (ஒற்றையர்) கோவை, ஈரோடு. ( இரட்டையர்) திருப்பூர், கன்னியாகுமரி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை