உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / மாநில ரோலர் ஸ்கேட்டிங் கல்லுாரி மாணவர் முதலிடம்

மாநில ரோலர் ஸ்கேட்டிங் கல்லுாரி மாணவர் முதலிடம்

உத்தமபாளையம்: சென்னை நேரு விளையாட்டரங்கில் ஜுன் 13 முதல் 15 வரை மாநில ரோலர் ஸ்கேட்டிங் போட்டி நடைபெற்றன. இப் போட்டிகளில் மாநிலம் முழுவதும் இருந்து 500 க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் பங்கேற்றனர். இதில் உத்தமபாளையம் கருத்தராவுத்தர் கல்லூரி மாணவர் சஞ்சித் கண்ணா 18 வயதுக்கு மேற்பட்ட சீனியர் ஆண்கள் பிரிவில் 500 மீட்டர் ரிங் ரேஸ் மற்றும் 250 மீட்டர் ரிங் ரேஸ் போட்டிகளில் பங்கேற்று முதலிடம் பெற்றார்.சாதனை மாணவரை கல்லூரி செயலர் எம்.தர்வேஸ் முகைதீன், ஆட்சி மன்ற குழு தலைவர் முகமது மீரான், முதல்வர் எச். முகமது மீரான் , மதிப்பீட்டுக் குழு ஒருங்கிணைப்பாளர் முகமது ஷமீம், உடற்கல்வி இயக்குநர் அக்பர் அலி ஆகியோர் பாராட்டி பரிசுகள் வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை