உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / மாநில ஸ்கேட்டிங் போட்டி பள்ளி மாணவர் சாதனை

மாநில ஸ்கேட்டிங் போட்டி பள்ளி மாணவர் சாதனை

-தேவதானப்பட்டி,: சி.பி.எஸ்.சி., பள்ளி மாணவர்களுக்கான தென்மாநில அளவிலான ரோலர் ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப் 2024 போட்டி கோவையில் நடந்தது. இதில் தமிழ்நாடு, புதுச்சேரி, ஆந்திரா, அந்தமான் நிக்கோபார் பகுதிகளில் இருந்து 450க்கும் அதிகமான மாணவர்கள் பங்கேற்றனர். இதில் தேவதானப்பட்டி கல்வி சர்வதேச பொதுப் பள்ளி எட்டாம் வகுப்பு மாணவர் ஜேசன் 13. பங்கேற்று வெள்ளி பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். இவர் தேசிய அளவில் நடைபெற உள்ள போட்டியில் பங்கேற்க தேர்வாகியுள்ளார். இவரை பள்ளி தலைவர் செந்தில்குமார், தாளாளர் குமரேஷ் வாழ்த்தினர்.--


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி