உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / மழையால் வைக்கோல் சேதம்: விலை குறைவால் புலம்பல்

மழையால் வைக்கோல் சேதம்: விலை குறைவால் புலம்பல்

கம்பம்: கம்பம் பள்ளத்தாக்கில் 14,707 ஏக்கரில் தற்போது இரண்டாம் போக நெல் அறுவடை நடந்து வருகிறது. இங்கு வழக்கம் போல குச்சனூர், மார்க்கையன்கோட்டை பகுதியில் முதன் முதலில் அறுவடை துவங்கி முடிந்துள்ளது. கம்பம் வட்டாரத்தில் 1500 ஏக்கர் அறுவடை முடிந்தது. உத்தமபாளையம், சின்னமனூர் பகுதிகளிலும் அறுவடை துவங்கி உள்ளது . இதற்கிடையே பிற்பகலில் மழை தொடர்ந்து பெய்து வருகிறது.இம் மழை காரணமாக இயந்திரங்கள் மூலம் அறுவடை செய்வதால், வைக்கோல் பயன்படுத்த முடியாமல் சேதமடைந்து விடுகிறது.கம்பம் விவசாயிகள் கூறுகையில், 'மழையால் நெற்பயிர் இயந்திரங்கள் மூலம் அறுவடை நடப்பதால் வைக்கோல் நனைந்து சேதமாகிறது. 60 சென்ட் நிலத்தின் வைக்கோல் ரூ.800 முதல் 1000 வரை விலை கிடைக்கிறது. அதுவும் வாங்க மறுக்கின்றனர். கடந்தாண்டு இதே நேரத்தில் ரூ.1800 வரை விலை கிடைத்தது. மழையால் இந்நிலை ஏற்பட்டுள்ளது. இரண்டாம் - போக அறுவடையின் போது தான் கேரள வியாபாரிகள் அதிகம் வருவார்கள் எனவே வைக்கோல் வீணாகிறது' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை