உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / அரசு கலைக்கல்லுாரியில் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு

அரசு கலைக்கல்லுாரியில் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு

ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி அரசு கலை,அறிவியல் கல்லூரியில் 2025- 26 ம் கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு ஜூன் 2ல் துவங்கும் என்று கல்லூரி முதல்வர் மணிகண்டன் தெரிவித்துள்ளார். அவர் தெரிவித்திருப்பதாவது:பி.எஸ்.சி., கணிதம், இயற்பியல், பி.காம்., சி.ஏ., பி.ஏ., பொருளியல் ஆகிய பாட பிரிவுகளில் சிறப்பு ஒதுக்கீட்டுப்பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு ஜூன் 2ல் நடைபெறும்.பி.எஸ்.சி., கணிதம், இயற்பியல் பாட பிரிவுகளுக்கு பொதுக்கலந்தாய்வு ஜூன் 4, பி.காம்., சி.ஏ.,படிப்புக்கான பொதுக்கலந்தாய்வு ஜூன் 5, பி.ஏ., பொருளியல் பிரிவுக்கான பொதுக்கலந்தாய்வு ஜூன் 9ம் தேதியும் நடைபெறும் என தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !