உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / விடுதியில் மாணவர் தூக்கிட்டு தற்கொலை

விடுதியில் மாணவர் தூக்கிட்டு தற்கொலை

கம்பம் : கம்பமெட்டு ரோட்டில் உள்ள ஆதரவற்றோர் இல்லத்தில் தங்கி படித்து வந்த மாணவர் நேற்று தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகில உள்ள முக்குன்றம் கிராமத்தை சேர்ந்த பைரோஸ் மகன் சுஹேல் 15. இவரது தந்தை கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். ஐந்தாம் வகுப்பு வரை படித்த சுஹேலை, கம்பத்தில் கம்பமெட்டு ரோட்டில் உள்ள அரபி பள்ளியில் படிப்பதற்காக சேர்த்துள்ளனர். அருகில் உள்ள ஆதரவற்றோர் இல்லத்தில் தங்கி படிக்க ஏற்பாடு செய்துள்ளனர். கடந்தாண்டு ஜூலையில் சேர்த்துள்ளனர். நேற்று மாலை விடுதி கட்டடத்தில் தூக்கிட்டு இறந்துள்ளார். விடுதி வார்டன் முகைதீன் கம்பம் வடக்கு போலீசாருக்கு தகவல் அளித்தார். போலீசார் சுஹேலின் உடலை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சுஹேலின் தாய் சுல்த்தானா புகாரில், போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ