| ADDED : நவ 18, 2025 04:39 AM
ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி பாரத் நிகேதன் பொறியியல் கல்லுாரியில் உடற்கல்வித் துறை சார்பில் முதலாம் ஆண்டு பொறியியல் படிக்கும் மாணவர்களுக்கு 'உடல் நலம் தொடர்பான நடவடிக்கைகள் மூலம் மனங்களை துாண்டுதல்' என்ற தலைப்பில் கருத்தரங்கு நடந்தது. கருத்தரங்கில் சிறப்பு விருந்தினராக திருச்சி அண்ணா பல்கலை உடற்கல்வி பேராசிரியர் முருகன் பங்கேற்று மாணவர்களுக்கு உடற்கல்வி சார்ந்த விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசினார். நிகழ்ச்சியில் கல்லுாரி நிர்வாக தலைவர் மோகன் தலைமை வகித்தார். நிர்வாகக்குழு உறுப்பினர்கள் பிரசன்ன வெங்கடேசன், ரேணுகா, சுதா, கல்லூரி முதல்வர் அருள்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை கல்லுாரி உடற்கல்வி இயக்குனர் சிவா, கல்விக் குழும மேலாளர் நாகேந்திரகுமார், அனைத்துத்துறை தலைவர்கள், பேராசிரியர்கள் செய்திருந்தனர்.