பள்ளிகளில் சர்வதேச யோகா தின கொண்டாட்டம் பல்வேறு ஆசனங்கள் செய்து அசத்திய மாணவர்கள்
கம்பம்: ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21 சர்வதேச யோகா தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையொட்டி மாவட்டத்தில் பள்ளி, கல்லுாரிகளில் சர்வதேச யோகா தின நிகழ்ச்சிகள் நடந்தது.கம்பம் நாகமணியம்மாள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் உலக யோகாசன தினம் கொண்டாடப்பட்டது. பள்ளி தாளாளர் காந்தவாசன் தலைமை வகித்தார். இணைச் செயலர் சுகன்யா முன்னிலை வகித்தார். முதல்வர் புவனேஸ்வரி வரவேற்றார்.மாணவ மாணவிகள் பல்வேறு ஆசனங்களை செய்து அசத்தினார்கள். பள்ளி தாளாளர் பேசுகையில், 'மன நலம், உடல் நலம் உள்ளிட்ட அனைத்து பிரச்னைகளுக்கும் யோகாவில் தீர்வு உள்ளது. குறிப்பாக சர்க்கரை, ரத்த அழுத்தம், மூட்டு வலி தீர்வுகாணும் ஆசனங்கள் உள்ளது. அனைவரும் யோகாசனம் செய்ய வேண்டும்,' என்றார். நிகழ்ச்சியை யோகா ஆசிரியர்கள் துரைராஜேந்திரன், ரவிராம் செய்திருந்தனர். துணை முதல்வர் சரவணன் நன்றி கூறினார்.கூடலுார் :மழலையர் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் முதல்வர் சகிலாசுலைமான் தலைமையில் விழா நடந்தது. நிர்வாகிகள் நடராஜன், கிருஷ்ணமூர்த்தி, பிரபாகரன், கணேஷ்வரி, ஆனந்தி முன்னிலை வகித்தனர். யோகா நிபுணர் ராஜேந்திரன், மாவட்ட யோகா பயிற்சியாளர் ரவிராம் ஏற்பாடுகளை செய்திருந்தனர். நிகழ்ச்சியில் சக்கராசனம், திரிகோணாசனம், ஏகபாத சிக்ந்தாசனம், யோக நித்திரை, அனந்த சயனாசனம், புஜங்காசனம், துர்வாசனம், சக்கர பந்தாசனம், கண்ட பேருண்டாசனம் முதலிய ஆசனங்கள் மாணவர்களால் செய்து காண்பிக்கப்பட்டன.போடி: பிச்சாண்டி நடுநிலைப் பள்ளியில் அறிவு திருக்கோயில் மனவளக்கலை மன்றம் சார்பில் மாணவர்களுக்கான யோகா பயிற்சி முகாம் நடந்தது. பள்ளி தலைமையாசிரியர் மரியசிங்கம் தலைமை வகித்தார். மன வளக்கலை மன்ற பேராசிரியர்கள் சங்கரேஸ்வரி, அருள்நிதி கிரிஜா ஆகியோர் யோகா, மூச்சுப் பயிற்சி செய்யும் முறைகள், அதன் முக்கியத்துவம், பயன்கள் குறித்து எடுத்து கூறினர். 6, 7, 8 ம் வகுப்பு மாணவர்களுக்கு 'அமைதி' என்ற தலைப்பில் ஓவியப் போட்டி நடந்தது. வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.ஆண்டிபட்டி: லிட்டில் பவர் பள்ளியில் சர்வதேச யோகா தினத்தில் பள்ளி தாளாளர் ஹென்றி அருளானந்தம், செயலாளர் தமயந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி முதல்வர் உமா மகேஸ்வரி, நிர்வாகி மாத்யூ ஜோயல் ஆகியோர் பேசினர். யோகா ஆசிரியை அமுதவல்லி யோகாவின் செயல்முறைகள், பலன்கள் குறித்து மாணவர்களுக்கு விளக்கினார். ஆசிரியைகள் பூமா, ராகினி, திவ்யா, பாண்டிச்செல்வி, கவிதா ஆகியோர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.