குமுளி எல்லையில் ஆய்வு
கூடலுார்: தேனி மாவட்டத்திலிருந்து கேரளாவிற்கு ரேஷன் அரிசி கடத்தலை தடுக்கும் பொருட்டு இரு மாநில அதிகாரிகள் அவ்வப்போது கூட்டுக் குழு கூட்டம் நடத்தி நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இருந்த போதிலும் ரேஷன் அரிசி கடத்தல் தொடர்ந்துள்ளது. இந்நிலையில் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு மதுரை மண்டல டி.எஸ்.பி., செந்தில் இளந்திரையன் குமுளி எல்லையில் ஆய்வு மேற்கொண்டார். போலீசாரிடம் அரிசி கடத்தலை முழுமையாக தடுக்க ஆலோசனை வழங்கினார். இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார், எஸ்.ஐ., பாரத்லிங்கம் உடன் இருந்தனர்.