29 வர்த்தக நிறுவனங்களுக்கு சப் கலெக்டர் நோட்டீஸ் மூணாறில் வர்த்தகர்கள் கலக்கம்
மூணாறு : மூணாறில் சப் கலெக்டர் அறிக்கையால் ஆற்றோரம் ஆக்கிரமிப்புகளில் உள்ள கடைகளுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. மூணாறு நகர் முழுதுவம் தனியார் தேயிலை கம்பெனி வசம் உள்ளது. கடைகள், குடியிருப்புகளுக்கு நிர்வாகம் வாடகை வசூலிக்கிறது. வழக்கு: மார்க்கெட் பகுதியில் நிர்வாகம் வழங்கிய அளவை விட ஆக்கிரமிப்பில் பழக்கடைகள் உள்ளதாக சில வர்த்தகர்கள் கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அதேசமயம் ஆக்கிரமிப்புகளில் பல வர்த்தக நிறுவனங்கள் உள்ளதாக பழக் கடைகளைச் சார்ந்த எட்டு பேர் கொண்ட குழு நீதிமன்றத்தில் எதிர் மனு தாக்கல் செய்தனர். இது குறித்து ஆய்வு நடத்தி அறிக்கை தாக்கல் செய்யுமாறு தேவிகுளம் சப் கலெக்டருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. முன்னாள் சப் கலெக்டர் ஜெயகிருஷ்ணன் ஆய்வு நடத்தி உயர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தார். அதன்படி மூணாறில் உள்ள வர்த்தக நிறுவனங்களின் ஆவணங்களை சரிபார்த்து விதிமீறி கட்டுமானங்கள் இருக்கும் பட்சத்தில் நான்கு மாதங்களுக்குள் நடவடிக்கை எடுக்குமாறு உயர் நீதிமன்றம் நீதிபதிகள் முகம்மதுமுஸ்தாக், அப்துல் ஹக்கீம் ஆகியோர் கொண்ட அமர்வு 2024 ஏப்.12ல் தேவிகுளம் சப் கலெக்டருக்கு உத்தரவிட்டனர். ஆனால் தொடர் நடவடிக்கை இன்றி உத்தரவு கிடப்பில் போடப்பட்டது. இந்த வழக்கில் நீதிமன்றம் உத்தரவை மீறியதாக உயர் நீதிமன்றம் சப் கலெக்டருக்கு நோட்டீஸ் அனுப்பியது. இதனையடுத்து நடவடிக்கையில் இறங்கிய சப் கலெக்டர் ஆர்யா முதல் கட்டமாக நகரில் ஜி.எச். ரோட்டில் பெரியவாரை பாலம் முதல் சர்ச்சில் பாலம் வரையில் உள்ள ஓட்டல், தங்கும் விடுதி உட்பட 29 வர்த்தக நிறுவனங்களின் நிலம், கட்டடம் ஆகியவற்றின் உரிமை தொடர்பான ஆவணங்களை செப். ஒன்று முதல் செப்.3 க்குள் நேரில் ஆஜராகி தாக்கல் செய்து விளக்கம் அளிக்குமாறு நோட்டீஸ் அளித்தார். கொச்சி- தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் போடிமெட்டு அருகில் உள்ள பூப்பாறை நகரில் ஏற்பட்டது. அப்பிரச்னையில் தலையிட்ட கேரள உயர் நீதிமன்றம் நூற்றுக்கும் மேற்பட்ட கடைகளை ஓராண்டுக்கு முன்பு பூட்டியது. இதே நிலைமை மூணாறில் ஏற்பட வாய்ப்புகள் உள்ளதால் வர்த்தகர்கள் கலக்கம் அடைந்தனர்.