உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / சொட்டு நீர் பாசனம் அமைக்க மானியம்

சொட்டு நீர் பாசனம் அமைக்க மானியம்

கடமலைக்குண்டு, செப்.1- கடமலைக்குண்டு மயிலாடும்பாறை ஒன்றியத்தில் சொட்டு நீர் பாசனம் அமைக்க அரசு மானியத்தை பெற்று பயனடையுமாறு வேளாண் உதவி இயக்குனர் பாண்டி தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது: கடமலைக்குண்டு வட்டாரத்தில் நடப்பு நிதியாண்டில் 80 எக்டேர் சொட்டு நீர் பாசனம் அமைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் சிறு குறு விவசாயிகள் 2 எக்டேருக்கு குறைவாக வைத்துள்ளவர்களுக்கு 100 சதவீதம் மானியம். இரண்டு எக்டேருக்கு அதிகம் வைத்துள்ளவர்களுக்கு 75 சதவீதம் மானியம் வழங்கப்படும். மேலும் ஒரு விவசாயி அதிகபட்சம் 5 எக்டேர் வரை பயன் பெறலாம். இத்திட்டத்தில் ஏழு ஆண்டுக்கு முன்பு பயனடைந்திருக்கும் விவசாயிகள் மீண்டும் விண்ணப்பிக்கலாம். திட்டத்தில் பயனடைய விரும்பும் விவசாயிகள் கடமலைக்குண்டு வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு பயன் பெறலாம் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை