உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / எஸ்.யூ.எம்.பள்ளி விளையாட்டு விழா

எஸ்.யூ.எம்.பள்ளி விளையாட்டு விழா

கம்பம்: ராயப்பன்பட்டி எஸ்.யூ.எம். மேல்நிலைப்பள்ளி 62 வது விளையாட்டு விழா நடந்தது. உடற்கல்வி இயக்குனர் அருள் செல்வன் வரவேற்றார். தேசிய கொடியை உத்தமபாளையம் டி.எஸ்.பி. வெங்கடேசன் ஏற்றினார். ஒலிம்பிக் கொடியை கருத்தராவுத்தர் கல்லூரி உடற்கல்வி இயக்குநர் அக்பர்அலி ஏற்றினார். பள்ளி கொடியை தாளாளர் பிரபாகர் ஏற்றி, அணிவகுப்பு மரியாதையை ஏற்றார். ஒலிம்பிக் தீபம் ஏற்றி உறுதி மொழியை உடற்கல்வி ஆசிரியை சுவானிட்டா வாசித்தார்.மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள், பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. பரிசளிப்புவிழாவிற்கு சர்வதேச தடகள வீரரும், சென்னை சுங்கத் துறை துணை ஆணையர் பாலமுருகன் தலைமை வகித்து, போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினார். உடற்கல்வி ஆசிரியர் கபிலன் வரவேற்றார். உடற்கல்வி ஆசிரியை இம்மாக்குலேட் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி