கோடை வெயில் விழிப்புணர்வு
போடி, : போடி பிச்சாண்டி நடுநிலைப் பள்ளியில் கோடை வெயில் தாக்கத்தில் இருந்து மாணவர்கள் தங்களை பாதுகாத்துக் கொள்வதற்கான விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது. தலைமை யாசிரியர் மரிய சிங்கம் தலைமை வகித்தார். வெயிலின் தாக்கம் அதிகரிப்பால் உடல் சூட்டை அதிகரிக்க செய்யும் உணவுப் பொருட்களை மாணவர்கள் தவிர்க்க வேண்டும். நீர் சத்து நிறைந்த மோர், வெள்ளரி பிஞ்சு, நுங்கு, தர்பூசணி, இளநீர், எலுமிச்சை சாறு, சீரக தண்ணீர் பருக வேண்டும். வெயிலில் சுற்றுவதை தவிர்ப்பதோடு, சுத்தமான நீரில் கை, கால்களை கழுவ வேண்டும். வெளியே செல்லும் போது குடையை எடுத்து செல்வதோடு, பருத்தி ஆடைகளை அணிய வேண்டும் என்ற விழிப்புணர்வை 6 முதல் 8 ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு ஆசிரியர்கள் ஏற்படுத்தினர்.