உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / சூரியகாந்தி விளைச்சல், விலை அதிகரிப்பு விவசாயிகள் மகிழ்ச்சி

சூரியகாந்தி விளைச்சல், விலை அதிகரிப்பு விவசாயிகள் மகிழ்ச்சி

போடி:போடி அருகே சூரியகாந்தி சாகுபடியில் விளைச்சல் மட்டும் இன்றி விலையும் அதிகரித்து உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.தேனி மாவட்டத்தில் போடி அருகே அம்மாபட்டி, பெருமாள் கவுண்டன்பட்டி, கோணாம்பட்டி, டொம்புச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை விவசாயிகள் சூரியகாந்தி அதிக அளவில் பயிரிட்டனர். அதன் பின் சூரியகாந்தி விதைகளுக்கு விலை இல்லாததால் பயிரிடுவதில் விவசாயிகள் ஆர்வம் காட்ட வில்லை.சூரியகாந்தி விதைப்பு செய்து 4 மாதத்தில் அறுவடைக்கு தயாராகிவிடும். நடவு செய்து உரமிட்டால் போதுமானது. மருந்தடிப்பு, களை எடுப்பு பணிகள் இல்லை. செலவும் குறைவு என்பதால் விவசாயிகள் மீண்டும் சூரியகாந்தி சாகுபடிக்கு திரும்புகின்றனர். தற்போது விசுவாசபுரம் பகுதியில் 10 ஏக்கரில் சூரியகாந்தி பயிரிடுட்டுள்ளனர். விவசாயிகள் கூறுகையில், 'தற்போது நல்ல விலை உள்ளதால் சூரியகாந்தி பயிரிட்டு உள்ளோம். வெள்ளக்கோயில் பகுதியில் இருந்து வியாபாரிகள் வருகை தந்து குவிண்டால் ரூ.5500 முதல் ரூ. 5750 வரை விவசாயிகளிடம் விலைக்கு வாங்கி செல்கின்றனர். விலையும் உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளோம்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ