அரசு போக்குவரத்து ஓய்வூதியர்கள் போராட்டத்திற்கு ஆதரவு
தேனி: 109 மாத டி.ஏ., நிலுவைத் தொகையை வழங்க உத்தரவிட்ட நீதிமன்ற தீர்ப்பை அமுல்படுத்த கோரியும், 20 மாதமாக ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு பண பலன் வழங்க கோரியும் சென்னையில் வரும் டிசம்பர் 17 ம் தேதி, அரசு போக்குவரத்து ஓய்வூதியர்கள் அரை நிர்வாண போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.இந்த போராட்டத்திற்கு ஆதரவு கோரி, பி.எம்.எஸ்., மாநில பேரவை பொதுச் செயலாளர் பாலனை நேரில் சந்தித்து, தேனி மாவட்ட பொறுப்பாளர்கள் போராட்டத்திற்கு ஆதரவு கேட்டு கடிதம் கொடுத்தனர்.