வாடகை கட்டட ரேஷன் கடைகள் கணக்கெடுப்பு
தேனி: மாவட்டத்தில் வாடகை கட்டங்களில் செயல்படும் ரேஷன்கடைகள் பற்றி கூட்டுறவுத்துறையினர் கணக்கெடுத்து வருகின்றனர். இதுபற்றி கூட்டுறவுத்துறை அதிகாரிகள் கூறுகையில், சட்டசபையில் எம்.எல்.ஏ.,க்கள் நிதியில் ரேஷன் கடைகள் கட்டலாம் என அமைச்சர் தெரிவித்துள்ளார். இதனால் மாவட்டத்தில் சட்டசபை தொகுதி வாரியாக வாடகை கடைகளில் இயங்கும் ரேஷன் கடைகள் பற்றி கணக்கெடுக்கும் பணி நடக்கிறது. தொகுதி வாரியாக எம்.எல்.ஏ.,க்களிடம் அளிக்க உள்ளோம். அவர்கள் தொகுதி மேம்பாட்டு நிதியில் கட்டுமான பணிகள் மேற்கொள்ள இந்த பட்டியல் உதவும் என்றனர்.