மேலும் செய்திகள்
கோரிக்கைகளை வலியுறுத்தி சர்வேயர்கள் போராட்டம்
10-Dec-2024
தேனி: தேனி கலெக்டர் அலுவலகம், தாலுகா அலுவலகங்களில் பணி புரியும் சர்வேயர்கள் நில அளவை அலுவலவர்கள் ஒன்றிப்பு சார்பில் 'தகுதி உள்ள நில அளவர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும்.ஆய்வாளர், துணை ஆய்வாளர் ஊதிய முரண்பாட்டை களைந்திட வேண்டும் உள்ளிட்ட 9அம்ச கோரிக்கையை வலியுறுத்திநேற்று தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டதில் ஈடுபட்டனர்.இதே கோரிக்கைகளை வலியுறுத்தி கலெக்டர் அலுவலக வளாகத்தில் மாவட்ட தலைவர் வேல்முருகன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மாவட்ட செயலாளர் சேதுபதிராஜா, மாவட்ட துணைத்தலைவர் செல்வராஜ், மாவட்ட பொருளாளர் வைரமுத்து உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
10-Dec-2024