ரூ. ஒரு கோடிக்கு கதர் ஆடைகள் விற்க இலக்கு
தேனி; தீபாவளியை முன்னிட்டு தேனி மாவட்டத்தில் ரூ. ஒரு கோடிக்கு கதர் ஆடைகள் விற்பனை செய்ய கதர் கிராமத் தொழில் வாரியம் இலக்கு நிர்ணயித்துள்ளது. காந்தி ஜெயந்தியை முன்னிட்டு தேனி காமராஜர் பஸ் ஸ்டாண்டில் உள்ள காதி கிராப்ட் அங்காடியில் மகாத்மா காந்தி உருவப்படத்திற்கு கலெக்டர் ரஞ்ஜீத்சிங் மரியாதை செலுத்தினார். தொடர்ந்து தீபாவளி சிறப்புதள்ளுபடி கதர் விற்பனையை துவக்கி வைத்தார். டி.ஆர்.ஓ., மகாலட்சுமி, நகராட்சி நகர் நல அலுவலர் கவிப்பிரியா, செயற்பொறியாளர் குணசேகரன், கதர் ஆய்வாளர் திருச்செல்வம், மேலாளர் ஜோதிராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மாவட்டத்தில் கடந்தாண்டு காந்திஜெயந்தி, தீபாவளியை முன்னிட்டு ரூ. 38 லட்த்திற்கு கதர் ஆடைகள் விற்பனை செய்யப்பட்டன. இந்தாண்டு ரூ. ஒரு கோடிக்கு கதர் ஆடைகள் விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பருத்தி, கதர், பாலிஸ்டர், பட்டு ரகங்களுக்கு 30 சதவீத தள்ளுபடி, அரசு, தனியார் ஊழியர்களுக்கு கடன் வசதி உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.