உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / மாவட்டத்தில் 15 மையங்களில் ஆசிரியர் தகுதி தேர்வு

மாவட்டத்தில் 15 மையங்களில் ஆசிரியர் தகுதி தேர்வு

தேன: மாவட்டத்தில் அக்.12ல் நடக்கும் முதுகலை ஆசிரியர் தகுதி தேர்வினை 4,242 பேர் எழுதுகின்றனர். தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள முதுகலை ஆசிரியர் பணியிடங்களுக்கான ஆசிரியர்களை தேர்வு செய்யும் தகுதித் தேர்வு அக்.12ல் நடக்கிறது. இத்தேர்வில் 14 பாடங்களில் தேர்வு நடக்கிறது. தேனி மாவட்டத்தில் 15 மையங்களில், காலை 10:00 முதல் மதியம் 1:30 மணி வரை இத்தேர்வு நடக்கிறது. தேர்வு எழுத 4,242 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தேர்வு மையங்களின் கண்காணிப்பாளர்கள், பறக்கும் படை உள்ளிட்டவற்றில் தலைமை ஆசிரியர்கள், அலுவலர்கள் நியமிக்கும் பணியை கல்வித்துறையினர் மேற்கொண்டு உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ