உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / தன்னம்பிக்கை வளர்க்கும் வகையில் பேச ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தல்

தன்னம்பிக்கை வளர்க்கும் வகையில் பேச ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தல்

தேனி, : வகுப்புகளில் மாணவர்களிடம் தன்னம்பிக்கை வளர்க்கும் வகையில் பேசி உயர்நிலை, மேல்நிலைப்படிப்பிற்கு உள்ள படிப்புகள் பற்றி எடுத்துரைக்குமாறு ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கல்வித்துறையினர் தெரிவித்தனர்.கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வில் குறைந்த மதிப்பெண், தோல்வியடைந்தால் என்ன செய்வதென்று தெரியாமல் மாணவ, மாணவியர்கள் தவிக்கின்றனர். மேலும் சிலர் தவறான முடிவுகளை எடுக்கின்றனர். இப்பிரச்னைகளுக்கு தீர்வு காண கல்வி ஆண்டு துவக்கத்திலேயே பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 முடித்த பின் உள்ள உயர்கல்வி, தொழிற்கல்வி படிப்புகள், வேலைவாய்ப்புகள் பற்றி வகுப்புகளில் ஆசிரியர்கள் முன்னரே தெரிவிக்க கூறி உள்ளோம். மேலும், தோல்வி அடைந்தால் உடனடி தேர்வு எழுதி எவ்வாறு வெற்றி பெறுவது, தன்னம்பிக்கை வளர்த்து கொள்வது பற்றி ஆசிரியர்கள் மாணவர்களுக்கு எடுத்துரைக்க அறிவுறுத்தி உள்ளோம். இது பற்றி மாணவர்கள் நன்றாக தெரிந்திருந்தால் பொதுத்தேர்வு முடிந்த பின் அவர்களுக்கு தேவையின்றி மன அழுத்தம் ஏற்படுவது தவிர்க்கப்படும். அதனால் முன்னரே மாணவர்களிடம் எடுத்துரைக்கப்பட உள்ளது. என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை