உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

தேனி : முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், முதுகலை ஆசிரியர்களுக்கு பணிபாதுகாப்பு வழங்க கோரி பிளஸ் 2 விடைத்தாள் திருத்தம் மையங்களில் கருப்பு பேட்ஜ் அணிந்து ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்டத்தில் தேனி மையத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் பெத்தணக்குமார் தலைமை வகித்தார். நிர்வாகிகள் செல்வம், அருண்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கம்பம் மையத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு நிர்வாகி பாஸ்கரன் தலைமை வகித்தார். நிர்வாகிகள் வினோத், முத்துக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஒரு மணி நேரம் பணி புறக்கணிப்பிலும் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ