உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / கம்பமெட்டில் பயன்பாட்டுக்கு வந்த தற்காலிக செக்போஸ்ட்

கம்பமெட்டில் பயன்பாட்டுக்கு வந்த தற்காலிக செக்போஸ்ட்

மூணாறு : கம்பமெட்டில் போக்குவரத்து துறை ஆணையர் உத்தரவுபடி மோட்டார் வாகன துறை சார்பில் தற்காலிக செக்போஸ்ட் பயன்பாட்டுக்கு வந்தது.கேரள, தமிழக எல்லையான கம்பமெட்டில் மோட்டார் வாகனதுறை சார்பில் செக்போஸ்ட் கட்டுமான பணிகள் ஆரம்பித்ததால், கடந்தாண்டு முதல் செயல்படவில்லை. அதனால் வாகன பெர்மிட், வரி, செஸ் ஆகியவை சரிபார்க்க இயலாமல் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டது. முறையாக ஆவணங்கள் இன்றி விபத்துகளில் சிக்கும் வாகனங்களுக்கு இன்சூரன்ஸ் உள்பட எவ்வித இழப்பீடு தொகையும் பெற இயலாத நிலை ஏற்பட்டது.அதனால் கம்பமெட்டில் செக்போஸ்ட் அமைக்குமாறு ஐய்யப்பா சேவா சங்கம் உள்பட பல்வேறு அமைப்பினர் புகார் அளித்தனர். இது குறித்து இடுக்கி போக்குவரத்து துறை அலுவலகம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையின்படி, கம்பமெட்டில் தற்காலிக செக்போஸ்ட் அமைக்குமாறு போக்குவரத்து துறை ஆணையர் உத்தரவிட்டார். அதன்படி மோட்டார் வாகன துறை சார்பில் செக்போஸ்ட் நேற்று முன்தினம் முதல் பயன்பாட்டுக்கு வந்தது. தற்போது சபரிமலையில் மண்டல, மகரவிளக்கு உற்ஸவம் துவங்கியதால், செக்போஸ்ட் வழி கடந்து செல்லும் தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த ஐய்யப்ப பக்தர்கள் வாகனங்களின் ஆவணங்களை பரிசோதிக்க இயலும் எனவும், அவை இல்லாத வாகனங்களில் அபராத தொகை வசூலிக்கப்படுவதின் மூலம் அரசுக்கு ரூ. பல கோடி வருவாய் கிடைக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !