உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / மூணாறு மலையில் கார் உருண்டது

மூணாறு மலையில் கார் உருண்டது

மூணாறு : மூணாறு அருகே அடிமாலி பகுதியைச் சேர்ந்தவர் நவாஸ் (35). பழைய வாகனங்களை வாங்கி,விற்பனை செய்கிறார். நேற்று மறையூரில் இருந்து இன்டிகா காரில் மூணாறு வந்தார். மூணாறு அருகே கன்னிமலை பகுதியில் வந்தபோது, கார் கட்டுப்பாட்டை இழந்து, மேல் ரோட்டில் இருந்து உருண்டு, கீழே உள்ள ரோட்டில் வந்து விழுந்து, நொறுங்கியது. நவாஸ் படுகாயம் அடைந்தார். அவரை அவ்வழியாக சுற்றுலா வந்த கல்லூரி மாணவர்கள் மீட்டு, டாடா ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை