உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / ஹிந்தியை எதிர்ப்பதால் நிதி தர மறுக்கிறது மத்திய அரசு

ஹிந்தியை எதிர்ப்பதால் நிதி தர மறுக்கிறது மத்திய அரசு

கம்பம் : ''ஹிந்தி திணிப்பை எதிர்ப்பதால் நமக்கு நியாயமாக தர வேண்டிய நிதியை மத்திய அரசு தர மறுக்கிறது,'' என, தேனி மாவட்டம் கம்பத்தில் நடந்த தெற்கு மாவட்ட தி.மு.க., மாணவரணி சார்பில் நடந்த மொழிப்போர் தியாகிகளுக்கான வீரவணக்க நாள் பொதுக்கூட்டத்தில் மாநில வர்த்தக அணி செயலாளர் காசிமுத்து மாணிக்கம் குற்றம்சாட்டினார்.மாணவரணி மாவட்ட அமைப்பாளர் பிரகாஷ் தலைமை வகித்தார். தெற்கு, வடக்கு நகர் பொறுப்பாளர்கள் பால்பாண்டி ராஜா, வீரபாண்டியன் வரவேற்றனர். மாவட்ட செயலாளர் ராமகிருஷ்ணன் முன்னிலை வகித்தார்.மாநில வர்த்தக அணி செயலாளர் காசிமுத்து மாணிக்கம் பேசியதாவது: ஈரோடு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட மாட்டேன் என அ.தி.மு.க., பொது செயலாளர் பழனிசாமி கூறுகிறார். எம்.ஜி.ஆர்., கருணாநிதி, ஜெயலலிதா ஆட்சி காலங்களில் எதிர்கட்சிகள் இடைத்தேர்தல்களில் வெற்றி பெற்றுள்ளன. ஈ.வே.ரா.,வை பற்றி பேச நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு என்ன தகுதி உள்ளது. பிரபாகரன் அண்ணன் மகன் சீமானை பற்றி புட்டு, புட்டு வைத்துள்ளார். இந்தியை எதிர்ப்பதால் நமக்கு தர வேண்டிய நிதியை மத்திய அரசு தர மறுக்கிறது. நம்மை விட சிறிய மாநிலங்களுக்கு அதிக நிதி ஒதுக்கீடு தருகின்றனர். நாம் ஒரு ரூபாய் வரியாக கொடுத்தால் 29 பைசாவை தான் தருகிறார்கள். வெறும் 23 சதவீதம் உள்ளவர்கள் 77 சதவீதம் பேரை அடிமைப்படுத்தப் பார்க்கின்றனர். ஹிந்தியை படிப்பதால் என்ன வந்து விடப்போகிறது எனத் தெரியவில்லை. வெளிநாடுகளில் தற்போது இந்திய வம்சாவழியினர் பலர், உயர்பதவிகளில் உள்ளனர். 2026 சட்டசபை தேர்தலிலும் தி.மு.க.,விற்கு ஒட்டளிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். பேச்சாளர் பிரபாகரன், எம்.எல்.ஏ., மகாராஜன், தீர்மானக்குழு இணை செயலாளர் ஜெயக்குமார் உள்ளிட்ட பலர் பேசினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !