மேலும் செய்திகள்
காரில் பணத்துடன் சிக்கிய கமிஷனருக்கு புதிய பதவி
27-Nov-2024
கம்பம் : கம்பம் நகராட்சிக்கு புதிய கமிஷனர் நியமித்து ஒரு மாதம் ஆகியும் பொறுப்பேற்கவில்லை.கம்பம் கமிஷனராக இருந்த வாசுதேவன் தஞ்சை மாநகராட்சிக்கு ஆறு மாதங்களுக்கு முன் மாறுதலில் சென்றார். போடி நகராட்சி கமிஷனர் பார்கவி கூடுதல் பொறுப்பாக நியமிக்கப்பட்டார். இந்நிலையில் சென்னை நகராட்சி ஆணையரகத்தில் செக்சன் ஆபீசராக உள்ள உமாசங்கர், கம்பம் நகராட்சி கமிஷனராக நவ . 25 ல் நியமிக்கப்பட்டார். அதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டு ஒரு மாதத்தை நெருங்கும் நிலையில் அவர் பொறுப்பேற்கவில்லை.கூடுதல் பொறுப்பை கவனித்து வரும் பார்கவி, போடியிலே உள்ளார். எனவே நியமனம் செய்யப்பட்ட உமாசங்கரை உடனடியாக பொறுப்பேற்க உத்தரவிட வேண்டும்.கூடலூர் நகராட்சி கமிஷனர் பணியிடத்தை சின்னமனூர் கமிஷனர் கோபிநாத் கூடுதல் பொறுப்பாக கவனிக்கிறார்.கம்பத்தில் குடிநீர், குப்பை சேகரம், சுகாதாரம் உள்ளிட்ட பணிகள் தொடர்பாக பிரச்னைகள் எழும் உடனே நடவடிக்கை எடுக்க கமிஷனர் பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
27-Nov-2024