உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / தெப்பம் பராமரிக்க ஒதுக்கிய நிதியை பயன்படுத்த விடாத அறநிலையத்துறை

தெப்பம் பராமரிக்க ஒதுக்கிய நிதியை பயன்படுத்த விடாத அறநிலையத்துறை

உத்தமபாளையம் : உத்தமபாளையம் காளாத்தீஸ்வரர் ஞானம்பிகை கோயில் தெப்பம் பராமரிப்பு பாதிநிறைவடைந்த நிலையில் ஒதுக்கிய நிதியை அறநிலையத் துறை பயன்படுத்த அனுமதிக்காமல் உள்ளது.உத்தமபாளையம் காளாத்தீஸ்வரர் ஞானாம்பிகை கோயில் வரலாற்று சிறப்புமிக்கது. இக்கோயில் தென் காளஹஸ்தி என அழைக்கப்படுகிறது. இது காலசர்ப்ப தோஷ நிவர்த்தி தலமாகும். ராகுவும், கேதுவும் தனித் தனி சன்னதிகளில் தம்பதி சகிதமாக எழுந்தருளியிருப்பது சிறப்பாகும். வாரந்தோறும் ஞாயிற்று கிழமைகளில் மாலை ராகு காலத்தில் நடைபெறும் பூஜையில் பங்கேற்க பல்வேறு மாவட்டங்களிலிருந்து இங்கு வருகின்றனர்.புகழ் பெற்ற இந்த கோயிலின் தெப்பம் பராமரிப்பு பணிகள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு துவக்கப்பட்டது. உபயதாரர்களும் பணிகளை செய்தனர். அரசு சார்பில் ரூ.12 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது. அந்த நிதி பேரூராட்சியிடம் வழங்கப்பட்டது. அதில் 7 லட்சம் வரை செலவழித்துள்ளனர். மீதம் ரூ.5 லட்சம் பேரூராட்சியிடம் உள்ளது. பேரூராட்சியும் தெப்பத்தை பராமரிக்க தயார் என்கிறதுஆனால் ஹிந்து அறநிலைய துறையோ பணி செய்ய அனுமதி மறுக்கிறது. நிதியை அறநிலைய துறையிடம் தாருங்கள் என்கிறது. பேரூராட்சி நிதியை வழங்க மறுக்கிறது. இந்த இரண்டு துறைகளுக்கும் இடையே பிரச்னையால் தெப்பம் பாதி கிணறு தாண்டிய நிலையில் பராமரிப்பு பணிகள் அரைகுறையாக உள்ளது. பராமரிப்பு பணி நடைபெறாததால் தெப்பத் திருவிழா நடத்த முடியாத நிலை உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ