உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் இழப்பீடு அரசு வழங்க எதிர்பார்ப்பு

ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் இழப்பீடு அரசு வழங்க எதிர்பார்ப்பு

மாவட்டத்தில் பெரியகுளம், தேனி, போடி, சின்னமனூர், கம்பம், கூடலூர் என 30 ஆயிரம் ஏக்கரில் மா விவசாயம் உள்ளது. 15 ஆயிரம் விவசாயிகள் மா சாகுபடியில் ஈடுபட்டுள்ளனர். நான்கு மாதம் தொடர் வேலையால் 25 ஆயிரம் தொழிலாளர்கள் இதனை நம்பி உள்ளனர்.தமிழகத்தில் தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம் மாவட்டத்திற்கு அடுத்து பெரியகுளத்தில் அதிகளவில் மா சாகுபடி உள்ளது. மா சீசன் மார்ச்சில் துவங்கி ஜூலை வரை அறுவடை இருக்கும். மாவட்டத்தில் கல்லாமை, காசா, செந்தூரம் உட்பட பத்துக்கும் அதிகமான ரகங்கள் விளைகிறது. இங்கு விளையும் மாங்காய் தமிழகம், கேரளா, ஆந்திரா வரை செல்கிறது.

விளைச்சல், விலை இல்லை

இந்தாண்டு பருவநிலை மாற்றத்தால் 20 சதவீதம் முதல் 30 சதவீதம் வரை விளைச்சல் குறைந்துள்ளது. இதனால் மாங்காய்க்கு நல்ல விலை கிடைக்கும் என விவசாயிகள் இருந்தனர். மாறாக 70 ஆண்டுகளில் எப்போதும் இல்லாத வகையில் விலை வீழ்ச்சியடைந்தது.

நிர்வாகச் செலவு

ஒரு ஏக்கர் மாந்தோப்பில் களை அகற்றுவது, தண்ணீர் பாய்ச்சுவது, மருந்து தெளிப்பு, அறுவடை வரை ரூ.50 ஆயிரம் செலவாகிறது.கடந்தாண்டு 1 டன் ரூ.30 ஆயிரத்துக்கு விற்ற கல்லாமை தற்போது ரூ.4 ஆயிரத்துக்கும், ரூ.80 ஆயிரம் விற்ற காசா ரூ.25 ஆயிரத்துக்கு கேட்கின்றனர். தற்போது விலையில் ஏக்கருக்கு ரூ.45 ஆயிரம் இழப்பு ஏற்பட்டுள்ளது.இதனால் ஆயிரக்கணக்கான ஏக்கரில் மாங்காய் அறுவடை செய்யாமல், மரத்திலிருந்து விட்டுள்ளனர். இதனால் மாம்பழமாக மாறி கீழே உதிர்கிறது. இதனை பார்க்கும் விவசாயிகள் கண்ணீர் வடிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை