உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / மூன்றுபோகம் விளைந்த நிலங்களில் ஒரு போகத்திற்கே வழியின்றி தவிப்பு

மூன்றுபோகம் விளைந்த நிலங்களில் ஒரு போகத்திற்கே வழியின்றி தவிப்பு

ஆண்டிபட்டி : ஆண்டிபட்டி தாலுகா, தேக்கம்பட்டி ஊராட்சி டி.மீனாட்சிபுரம் அரண்மனை கண்மாய்க்கு மழைக்காலத்திலும் நீர் வரத்து இல்லாததால் வறண்டு கிடக்கிறது. கண்மாய் நீரை நம்பியுள்ள 5 கிராமங்களில் விவசாயம் பாதிப்பதால் விவசாயிகள் மாற்றுத் தொழில் தேடி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. முப்பது ஏக்கர் நீர்த்தேக்க பரப்பளவு கொண்ட இக் கண்மாய்க்கு ஒண்டிக்கரடு பகுதியில் இருந்து நொச்சி ஓடை வழியாக மழை நீர் வரத்து உள்ளது. கடந்த சில ஆண்டுகளில் போதிய மழை இல்லாததால் ஓடையில் வரும் குறைவான நீர் சில மாதங்களில் வற்றி விடுகிறது. கண்மாயில் நேரடி பாசனத்திற்கான மடை, வாய்க்கால் இருந்தும் கண்மாய் நிரம்பாததால் பயன்படுத்த முடியவில்லை. மூன்று போகம் விளைந்த நிலங்களில் ஒரு போகத்திற்கு வழி இல்லாமல் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். கடந்த பல ஆண்டுகளாக கண்மாயில் தொடர்ந்து நீர் தேங்காததால் முத்துரங்காபுரம், தேக்கம்பட்டி, மீனாட்சிபுரம், அடைக்கம்பட்டி, பழனித்தேவன்பட்டி, மரிக்குண்டு கிராமங்களிலும் நிலத்தடி நீர் ஆதாரம் பாதிக்கிறது. கண்மாய் நிலவரம் குறித்து இப்பகுதி விவசாயிகள் கூறியதாவது: துரைச்சாமிபுரம் கால்வாய் நீரை வழங்க வேண்டும் ஜெயக்கொடி, தேக்கம்பட்டி: அரண்மனை கண்மாய்க்கு வரும் நீரை முத்தாலம்மன் ஓடை அருகே பிரித்து கண்டமனூர் ஊரணிக்கு அனுப்புகின்றனர். கடந்த 10 ஆண்டுக்கு முன்புதான் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. இதனால் அரண்மனை கண்மாய்க்கு முழு அளவில் நீர் கிடைக்காமல் வறண்டு விடுகிறது. மூல வைகை ஆற்றில் இருந்து துரைச்சாமி கால்வாய் வழியாக வரும் நீர், அரண்மனை கண்மாயை ஒட்டிய கால்வாய் வழியாக மரிக்குண்டு, பாலசமுத்திரம், ரங்கசமுத்திரம் கண்மாய்களுக்கு செல்கிறது. இதில் வரும் நீரை கண்மாய்க்கு திருப்பி விட்டாலே சில வாரங்களில் கண்மாய் நிரம்பி விடும். கடந்த பல ஆண்டுகளாக விவசாயிகள் தொடர்ந்து வலியுறுத்தியும் இதற்கான நடவடிக்கை இல்லை. இக் கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக முதல்வர் ஸ்டாலின், முன்னாள் துணை முதல்வர் பன்னீர்செல்வம் ஆகியோர்களிடம் பலமுறை மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. துணை வாய்க்கால் அமைக்க வேண்டும் பி.சுப்புராஜ், முத்துரங்காபுரம்: துரைச்சாமிபுரம் கால்வாய் அமைக்கப்பட்ட போதே தலைப்பகுதியில் உள்ள அரண்மனை கண்மாய் உயரமான இடத்தில் இருப்பதாக தெரிவித்து நீர் கிடைக்காமல் செய்து விட்டனர். ராமச்சந்திராபுரம், ராஜேந்திரா நகர் பகுதிகளில் துணை மதகுகள் அமைத்து பொன்னம்மாள்பட்டி, அடைக்கம்பட்டி அருகே துணை வாய்க்கால் அமைத்து கண்மாய்க்கு நீர் கிடைக்கும் படி செய்ய லாம். ஆனால் துணை வாய்க்கால் இதுவரை அமைக்கப்படவில்லை. கடந்த காலங்களில் கண்மாய் நீரை பயன்படுத்தி 50 ஏக்கரில் நேரடி பாசனம் நடந்தது. தற்போது அந்த நிலங்கள் மானாவாரி நிலங்களாகி விட்டன. பெரியாறு அணை உபரி நீரை குள்ளப்பகவுண்டன்பட்டியில் இருந்து குழாய் மூலம் கொண்டு சென்று ஆண்டிபட்டி ஒன்றியத்திற்குட்பட்ட கண்மாய்களில் தேக்க விவசாயிகள் தொடர்ந்து வலியுறுத்துகின்றனர். ஆண்டுக்கு ஒருமுறை கண்மாயில் முழு அளவில் நீர் தேங்கினால் பல கிராமங்களில் ஆண்டு முழுவதும் விவசாயத்தை தொடர முடியும். விவசாயம் சார்ந்த கால்ந டை வளர்ப்பு, பால் உற்பத்தி தொழில்கள் வளர்ச்சி பெறும். கண்மாயில் நீர் தேங்குவதற்கான நடவடிக்கை களை அரசு மேற் கொள்ள வேண்டும் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை