மேலும் செய்திகள்
பாம்பு கடித்து பெண் பலி
05-Oct-2025
தேவதானப்பட்டி: பெரியகுளம் தாலுகா பெருமாள்கோவில்பட்டி காலனி தெருவைச் சேர்ந்த மணி மனைவி சிட்டம்மாள் 75. சாத்தாக்கோவில்பட்டி பகுதியில் பெட்டிக்கடை வைத்துள்ளார். இரு டூவீலரில் வந்த 35 வயது மர்மநபர்கள், சிட்டம்மாளிடம் ரூ.20 கொடுத்து 2 சிகரெட் வாங்கியுள்ளனர். சிறிது நேரத்தில் சிட்டம்மாள் முகத்தை துணியால் அமுக்கி மூக்கில் அணிந்திருந்த ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள 2 கிராம் தங்கமூக்குத்தி, பையில் வைத்திருந்த ரூ.300 யை பறித்து சென்றனர். தடுக்க முயன்ற சிட்டம்மாளை கீழே தள்ளிவிட்டு டூவீலரில் தப்பினர். காயமடைந்த சிட்டம்மாள் தேவதானப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்றார். தேவதானப்பட்டி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
05-Oct-2025