உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / பள்ளியில் மாணவியை அழைத்தவர் கைது

பள்ளியில் மாணவியை அழைத்தவர் கைது

தேவதானப்பட்டி : பெரியகுளம் அருகே குள்ளப்புரத்தை சேர்ந்தவர் ஆனந்தன் 39. இவரது மனைவி அழகேஸ்வரி 35. இவர்களுக்கு இரு மகள்கள் உள்ளனர். அழகேஸ்வரிக்கும், கீழத்தெரு முத்துப்பாண்டிக்கும் 36,க்கும் ஏற்பட்ட தொடர்பினால் ஒரு மாதத்திற்கு முன் முத்துப்பாண்டியுடன், அழகேஸ்வரி சென்று விட்டார். இந்நிலையில் முத்துப்பாண்டி, குள்ளப்புரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் அழகேஸ்வரி மகள் 13 வயது மாணவியை தன்னுடன் வருமாறு அழைத்துள்ளார்.ஆசிரியர்கள் முத்துப்பாண்டியை கண்டித்து வெளியே அனுப்பி வைத்தனர். இது குறித்து கேட்ட சிறுமியின் தந்தை ஆனந்தனை அவதூறாக பேசியுள்ளார். ஆனந்தன் புகாரில், ஜெயமங்கலம் எஸ்.ஐ., முருகப்பெருமாள், முத்துப்பாண்டியை கைது செய்தார்.-


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி