உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / அவதுாறாக பேசியவர் நீதிமன்ற உத்தரவில் கைது

அவதுாறாக பேசியவர் நீதிமன்ற உத்தரவில் கைது

தேனி : குறிப்பிட்ட சமுதாயத்தை அவுதுாறாக பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதை தொடர்ந்து ஜெயமங்கலத்தை சேர்ந்த பெரியசாமி சிறப்பு நீதிமன்ற உத்தரவில் போலீசார் கைது செய்து, பெரியகுளம் கிளை சிறையில் அடைத்தனர். ஜெயமங்கலத்தை சேர்ந்த பெரியசாமி. இவரது நண்பர் சில்வார்பட்டி முத்துக்காமாட்சி. இவர்கள் இருவரும் குறிப்பிட்ட சமுதாயத்தை அவதுாறாக பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதனால் ஜெயமங்கலம் காந்திநகர் காலனி தவமணிராஜா புகாரில் போலீசார் இருவர் மீதும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் ஜூலை 16ல் வழக்குப் பதிவு செய்து, விசாரித்தனர். ஆக.21ல் சிறப்பு நீதிமன்ற நீதிபதி அனுராதா உத்தரவில் முத்துக்காமாட்சி கைது செய்யப்பட்டார். அக்.6ல் பெரியசாமியை 48, போலீசார் கைது செய்து பெரிய குளம் கிளைச் சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !