உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / முப்பது ஏக்கரில் 20 ஏக்கர் ஆக்கிரமிப்பில் சிக்கி தவிப்பு பண்ணைத்தோப்பு சோதரணை கண்மாய்க்கு வந்த சோதனை

முப்பது ஏக்கரில் 20 ஏக்கர் ஆக்கிரமிப்பில் சிக்கி தவிப்பு பண்ணைத்தோப்பு சோதரணை கண்மாய்க்கு வந்த சோதனை

போடி: போடி ஒன்றியம், கோடங்கிபட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பண்ணைத்தோப்பில் உள்ள சோதரணை கண்மாய் 30 ஏக்கரில் 20 ஏக்கர் ஆக்கிரமிப்பில் சிக்கியதால் மழை நீரை முழுமையாக சேமிக்க முடியாமல் விவசாயிகள் சிரமம் அடைந்து வருகின்றனர். பண்ணைத்தோப்பு மெயின் ரோட்டில் 30 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது சோதரணை கண்மாய். கண்மாய்க்கு கொட்டகுடி ஆற்றில் இருந்து வரும் நீர் சோதரணை கண்மாய் நிரம்பி கோடங்கிபட்டி கணக்கன்குளம், வீரபாண்டி கன்னிமார்குளங்களுக்கு நீர் செல்லும். இக்கண்மாயில் தேங்கும் நீரால் 800 ஏக்கர் நிலங்கள் நேரடியாகவும், 600 ஏக்கருக்கு கிணறுகளில் நீர் மட்டம் உயர்ந்து மறைமுகமாக பாசனவசதி பெறுகின்றன. கொட்டகுடி ஆற்றில் இருந்து சோதரணை கண்மாய்க்கு நீர் வரும் பாதை, கண்மாய் நீர்பிடிப்பு பகுதியையும் தனி நபர்கள் ஆக்கிரமித்து உள்ளனர். கண்மாய் தூர் வாராததால் போதிய நீரை தேக்க முடியவில்லை. 4 ஆண்டுகளுக்கு கண்மாயில் ஆக்கிரமிப்புகளை அகற்ற நீர்வளத்துறை அதிகாரிகள் சர்வே மேற்கொண்டனர். அதன் பின் எவ்வித நடவடிக்கையும் இல்லை. இதுபற்றி விவசாயிகள் புகார் செய்தும் நடவடிக்கை இல்லை. இதனால் கண்மாய்க்கு வரும் மழைநீரை முழுவதும் தேக்க முடியாத நிலை உள்ளது. இதனால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து விவசாயிகள் வேதனையில் உள்ளனர். சோதரணைகண்மாயை முறையாக சர்வே செய்து அதில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர்வாரி, மழை நீரை தேக்கிட நீர்வளத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாயிகள் கருத்து: சர்வே செய்தும் நடவடிக்கை இல்லை சுரேஷ், கோடங்கிபட்டி: சோதரணை கண்மாயில் ஆகாயத்தாமரை செடிகள் அதிகளவில் வளர்ந்துள்ளன. கண்மாயை சுற்றி தனி நபர்கள் ஆக்கிரமித்து விவசாயம் செய்கின்றனர். நீர்வளத்துறையினர் சர்வே செய்து 10 ஆண்டுகளுக்கு மேலாகியும் ஆக்கிரமிப்பு ஆற்றப்பட வில்லை. இதனால் மழை நீரை தேக்கவும், கிணறுகளில் நிலத்தடி நீர்மட்டம் உயரவில்லை. ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர்வாரவும், சேதம் அடைந்ததை ஷட்டர், தடுப்புச்சுவர் சீரமைக்க வேண்டும். தரமான வகையில் சீரமைப்பு பணி செய்து மழைநீரை முழுவதும் தேக்கும் வகையில் நீர்வளத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆக்கிரமிப்பில் 20 ஏக்கர் முத்துக்காளை, பண்ணைத்தோப்பு: சோதரணை கண்மாயில் மழைநீர் முழுவதும் தேக்கி பல ஆண்டுகளுக்கு மேலாகிறது. கொட்டகுடி ஆற்று பகுதியில் இருந்து பண்ணைத்தோப்பு கண்மாய் வரை நீர்வரத்து பாதையை தனி நபர்கள் ஆக்கிரமித்து விவசாயம் செய்து வருகின்றார். இதனால் கண்மாய்க்கு போதிய நீர் வராததால் கண்மாயில் மழைநீர் முழுவதும் தேக்கி வைக்க முடியாத நிலை உள்ளது. கண்மாய் பகுதியை தனி நபர்கள் ஆக்கிரமித்து விவசாயம் செய்து வருவதால் 10 ஏக்கர் கூட இல்லாத அளவிற்கு குறைந்து உள்ளது. முறையாக சர்வே செய்து ஆக்கிரமிப்பு களை அகற்றி தூர்வார நீர்வளத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண் டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை