உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / 1200 வாக்காளர்களுக்கு ஒரு ஓட்டுச்சாவடி வீதம் பிரிப்பு: 167 ஓட்டுச்சாவடிகள் அதிகமாகிறது

1200 வாக்காளர்களுக்கு ஒரு ஓட்டுச்சாவடி வீதம் பிரிப்பு: 167 ஓட்டுச்சாவடிகள் அதிகமாகிறது

தேனி: மாவட்டத்தில் 1200 வாக்காளர்களுக்கு ஒரு ஓட்டுச்சாவடி வீதம் பிரிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இதனால் 2026 சட்டசபை தேர்தலில் 167 ஓட்டுச்சாவடிகள் வரை அதிகரிக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் அடுத்தாண்டு சட்டசபை தேர்தல் நடக்கிறது. இதற்கான பணிகளை தேர்தல் ஆணையம் துவங்கி உள்ளது. இந்நிலையில் 1200 வாக்காளர்களுக்கு மேல் உள்ள ஓட்டுச்சாவடிகளை இரண்டாக பிரிக்கவும், ஒரு ஓட்டுச்சாவடிக்கு அதிகபட்சம் 1200 வாக்காளர்கள் ஓட்டளிக்கும் வகையில் பிரிக்கப்பட்டு வருகிறது. இந்தாண்டு ஜன.,ல் வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலில் ஆண்டிபட்டி, பெரியகுளம்(தனி), போடி, கம்பம் ஆகிய 4 சட்டசபை தொகுதிகளில் 5.56 லட்சம் ஆண்கள், 5.82 லட்சம் பெண்கள், இதரர் 205 பேர் என மொத்தம் 11.38 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். மாவட்டத்தில் 563 அமைவிடங்களில் 1226 ஓட்டுச்சாவடிகள் அமைந்துள்ளன. தற்போது 1200 வாக்காளருக்கு ஒரு ஓட்டுச்சாவடி என கணக்கிடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதுவரை முடிந்துள்ள இப்பணியில் மாவட்டத்தில் 167 ஓட்டுச்சாவடிகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது என தேர்தல் பிரிவு அதிகாரிகள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை