உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / சுருளி அருவி பூத நாராயணர் கோயில் திருப்பணியில் சுணக்கம்

சுருளி அருவி பூத நாராயணர் கோயில் திருப்பணியில் சுணக்கம்

கம்பம்: சுருளி அருவியில் , பிரசித்தி பெற்ற பூதநாராயணர் கோயில் திருப்பணியில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. சுருளி அருவியில் மிகவும் பழமை வாய்ந்ததும், பிரசித்தி பெற்றதுமான பூதநாராயணர் கோயில் உள்ளது. ஒரே கருவறையில் சிவனும், பெருமாளும் எழுந்தருளியுள்ளனர். பூத நாராயணராக பெருமாளும், அத்தி வரதராக சிவனும் எழுந்தருளியுள்ள ஸ்தலமாகும். மறைந்த முன்னோர்களுக்கு இக்கோயிலில் மோட்ச தீபம் ஏற்றுவது சிறப்பானது. இக் கோயில் திருப்பணிகள் 2004 ல் நடைபெற்றுள்ளது . அதன் பின் நடைபெறவில்லை. 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பாபிஷேகம் நடத்த வேண்டும். இங்கு 20 ஆண்டுகளை கடந்ததால், 2024 ஜூன் மாதம் திருப்பணி செய்து கும்பாபிஷேகம் நடத்த பரம்பரை அறங்காவலர்களும், ஹிந்து அறநிலைய துறை முடிவு செய்து, பாலாலயம் செய்தனர். ஆனால் பாலாலயம் முடிந்த பின் திருப்பணி வேலைகள் செய்ய முயற்சிகள் நடைபெறவில்லை. ஹிந்து அறநிலைய துறை ஆண்டிற்கு ஒரு முறை உண்டியலை மட்டும் எடுத்து செல்கின்றனர். ஆனால் பிரசித்தி பெற்ற பூத நாராயணர் கோயில் திருப்பணிகளில் ஆர்வம் காட்டவில்லை. பாலாலயம் முடிந்து 14 மாதங்களை கடந்தும் பணிகள் நடக்கவில்லை. திருப்பணிக்கு உபயதாரர்களை அழைத்து கூறினாலே செய்து தர பலர் தயராக உள்ளனர். அதற்கான முயற்சிகளை ஹிந்து அறநிலைய துறை அதிகாரிகள் முன்னெடுக்க ஆன்மிக அன்பர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை