உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / பள்ளி சுற்றுச்சுவர் விழுந்து ஓராண்டாக சீரமைக்காத அவலம்

பள்ளி சுற்றுச்சுவர் விழுந்து ஓராண்டாக சீரமைக்காத அவலம்

பெரியகுளம் : தாமரைக்குளம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் சுற்றுச்சுவர் விழுந்து ஓராண்டாக ஆண்டுகளாகியும் சீரமைக்கப்படாமல் உள்ளது.பெரியகுளம் அருகே தாமரைக்குளம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி நூற்றாண்டை கடந்த பள்ளியாகும். இங்கு 60 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.3 ஆசிரியர்கள் உள்ளனர். கடந்தாண்டு வடகிழக்கு பருவமழையின் போது பள்ளியின் வலது பக்கம் சுற்றுச்சுவர் 15 மீட்டர் மழைக்கு விழுந்தது. பிற சுவர்களும் எப்போது வேண்டுமானாலும் விழும் அபாய நிலையில் உள்ளது. பள்ளி நிர்வாகம், பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர் பெரியகுளம் ஒன்றிய அலுவலகத்தில் மனுக்கள் கொடுத்துள்ளனர். ஓராண்டாகியும் நடவடிக்கை இல்லை. சுற்றுச்சுவர் விழுந்த பகுதியில் முள்செடிகளை வெட்டி வேலி போட்டுள்ளனர். இரவு நேரங்களில் சிலர் இதனையும் தாண்டி பள்ளி வளாகத்தில் மது குடித்து விட்டு பாட்டில்களை உடைத்து விட்டு செல்கின்றனர். பெரியகுளம் ஒன்றிய நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ