உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / காட்சிப்பொருளான மஞ்சப்பை இயந்திரம் பயன்பாடில்லாத குடிநீர் தொட்டி

காட்சிப்பொருளான மஞ்சப்பை இயந்திரம் பயன்பாடில்லாத குடிநீர் தொட்டி

தேனி : தேனி பழைய பஸ் ஸ்டாண்டில் வைக்கப்பட்டுள்ள மஞ்சப்பை இயந்திரம், குடிநீர் சுத்திகரித்து வழங்கும் இயந்திரம் பயன் இன்றி காட்சிப்பொருளாக உள்ளன.தேனி பழைய பஸ் ஸ்டாண்ட் வழியாக வெளியூர் செல்லும் டவுன் பஸ்கள், பிற மாவட்டங்களுக்கு செல்லும் பஸ்கள் வந்து செல்கின்றன. பழைய பஸ் ஸ்டாண்டில் நகராட்சி சார்பில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் பல ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்டது. ஆனால், குடிநீர் தொட்டி உள்ள பகுதியை பலர் ஆக்கிரமித்ததால் பயணிகள் பணம் கொடுத்து குடிநீர் வாங்கும் சூழல் உள்ளது.மாசுகட்டுப்பாட்டு வாரியம் சார்பில் பிளாஸ்டிக் பைக்கு மாற்றாக பல இடங்களில் மஞ்சப்பை வழங்கும் தானியங்கி இயந்திரம் அமைக்கப்பட்டு வருகிறது.பழைய பஸ் ஸ்டாண்டிலும் இயந்திரம் அமைக்கப்பட்டுள்ளது.ஆனால், அந்த இயந்திரம் பயன்பாட்டில் இல்லை. காட்சிப்பொருளாகவே உள்ளது.குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம், தானியங்கி மஞ்சப்பை இயந்திரங்களை பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை