உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / அக்டோபரில் அள்ளித்தந்த வானம் 2759.8 மி.மீ., மழைப்பொழிவு

அக்டோபரில் அள்ளித்தந்த வானம் 2759.8 மி.மீ., மழைப்பொழிவு

தேனி: மாவட்டத்தில் அக்டோபரில் 2759.8 மி.மீ., மழை பதிவாகி உள்ளது. இது கடந்த இரு ஆண்டுகளில் அக்.,ல் பெய்த மழை அளவை விட கூடுதலாகும். மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழையை விட வடகிழக்கு பருவமழை காலத்தில் அதிக மழை பொழிவு இருக்கும். இந்தாண்டு வடகிழக்கு பருவமழை அக்., 16ல் துவங்கியது. அக்., 16 முதல் 20 வரை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கனமழை, தொடர்மழை பெய்தது. அக்., மாதத்தில் அதிகபட்சமாக தேக்கடியில் 429 மி.மீ., பெரியாறு அணையில் 337.4 மி.மீ., போடியில் 268 மி.மீ., சண்முகநதி அணையில் 228.6 மி.மீ., பெரியகுளத்தில் 210மி.மீ., வீரபாண்டியில் 202.4 மி.மீ., மழை பதிவானது. ஆண்டிபட்டி, அரண்மனைப்புதுார், கூடலுார், மஞ்சளாறு, சோத்துப்பாறை, உத்தமபாளையம் ஆகிய பகுதிகளில் 100 முதல் 200 மி.மீ., மழை பதிவாகி உள்ளது. குறைந்தபட்சமாக வைகை அணையில் 89.8 மி.மீ., மழை என மொத்தம் 2759.8 மி.மீ., மழை பதிவாகி உள்ளது. அக்டோபர் 2023ல் 2515.6 மி.மீ., 2024ல் 2433 மி.மீ., மழைபதிவாகி இருந்தது. இந்த இரு ஆண்டுகளை ஒப்பிடுகையில் இந்தாண்டு கூடுதலாக மழை பதிவாகி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி