மேலும் செய்திகள்
கவிதை - கட்டுரை போட்டி: மாணவியர் அபாரம்
22-Jan-2025
உத்தமபாளையம் : தமிழக தமிழ் வளர்ச்சி, பண்பாட்டு துறை சார்பில் மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவிகள் பங்கேற்கும் கவிதை, கட்டுரை, பேச்சு - போட்டிகள் நடந்தது. தேனி மாவட்ட அளவில் நடைபெற்ற இப் போட்டியில் உத்தமபாளையம் விகாசா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி தஸ்மீன் கவிதை போட்டியில் மூன்றாம் பரிசு பெற்றார். பரிசு தொகை ரூ.5 ஆயிரம், சான்றிதழை கலெக்டர் ரஞ்சீத் சிங் நேற்று மாணவிக்கு வழங்கினார். வெற்றி பெற்ற மாணவியை பள்ளி தாளாளர் இந்திரா, செயலர் உதயகுமார், நிர்வாக அலுவலர் கிருஷ்ணமூர்த்தி, முதல்வர்கள் குமரேசன், அவிலா தெரசா பாராட்டி பரிசுகள் வழங்கினர்.
22-Jan-2025