கடையில் வைத்திருந்த ரூ.2.75 லட்சம் திருட்டு
ஆண்டிபட்டி: ஜம்புலிப்புத்தூர் வடக்குத்தெருவை சேர்ந்தவர் ஞானமணி 34, மதுரை மெயின் ரோடு சக்கம்பட்டியில் பைனான்ஸ் நடத்தி வருகிறார்.நேற்று முன்தினம் காலை 11:30 மணி அளவில் கடையில், டிராவில் பேக்கில் ரூ.2 லட்சத்து 75 ஆயிரத்தை மேஜை டிராவில் வைத்து பூட்டி விட்டு சென்றார். மாலையில் வந்து பார்த்தபோது கடையின் கண்ணாடி கதவு, மேஜையின் டிரா ஆகியவற்றை உடைத்து அதில் இருந்த ரூ.2 லட்சத்து 75 ஆயிரத்தை யாரோ திருடி சென்று விட்டனர். இது குறித்து ஞானமணி புகாரில் ஆண்டிபட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.