உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / மூணாறு ஊராட்சியில் கறவை பசு வழங்கும் திட்டத்தில் மோசடி இறைச்சிக்கு பசுக்களை விற்ற அவலம்

மூணாறு ஊராட்சியில் கறவை பசு வழங்கும் திட்டத்தில் மோசடி இறைச்சிக்கு பசுக்களை விற்ற அவலம்

மூணாறு: மூணாறு ஊராட்சியில் கறவை பசு வழங்கும் திட்டத்தில் மோசடியும், அவற்றை இறைச்சி கடைகளுக்கு விற்ற அவலமும் நடந்துள்ளது.மூணாறு ஊராட்சியில் பால்வள மேம்பாட்டு துறை சார்பில் கறவை பசுக்கள் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டது. அத்திட்டத்தில் ஒரு பசு ரூ.65 ஆயிரம் மதிப்பில் வழங்க முடிவு செய்து, அதற்கு பயனாளிகளிடம் ரூ.23 ஆயிரம் வசூலிக்கப்பட்ட நிலையில் எஞ்சிய ரூ.42 ஆயிரம் பால்வள மேம்பாட்டு துறை ஊராட்சி மூலம் வழங்கியது. திட்டத்தை செயல்படுத்தும் பொறுப்பு ஊராட்சிக்கு கீழ் செயல்படும் கால்நடை மருத்துவமனை டாக்டரிடம் ஒப்படைக்கப்பட்டது.ஊராட்சியில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மூன்று பெண் உறுப்பினர்கள் கொண்ட குழு மாவட்டத்தில் இரும்பு பாலம், முருக்காசேரி ஆகிய பகுதிகளில் இருந்து பசுக்களை வாங்கி வந்தனர்.பசுக்கள் அனைத்தும் உடல் நலம் குன்றி காணப்பட்டதால் அதிர்ச்சி அடைந்த பயனாளிகள் பசுக்களை வாங்க மறுத்து செலுத்திய பணத்தை திரும்ப கேட்டனர். இப்பிரச்னையில் தலையிட்ட சில உறுப்பினர்கள் பசுக்களை இறைச்சி கடைகளில் விற்பனை செய்து பயனாளிகளுக்கு செலுத்திய தொகையுடன் ரூ.10 ஆயிரம் அதிகம் தருவதாக பேச்சு வார்த்தை நடத்தினர். அதன்படி 60க்கும் மேற்பட்ட பசுக்கள் அடிமாலி, ஆனச்சால், வெள்ளத்தூவல் ஆகிய பகுதிகளில் உள்ள இறைச்சி கடைகளுக்கு விற்கப்பட்டன. பசுக்களை வாங்கி, இறைச்சி கடைகளில் விற்பனை செய்த வகையில் சில உறுப்பினர்கள் ரூ. லட்ச கணக்கில் பலனடைந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. அந்த மோசடி குறித்து போலீசாரிடம் புகார் அளிக்க எதிர்கட்சியினர் தயாராகி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை