உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / தேனியில் நாளை புத்தக திருவிழா துவக்கம்

தேனியில் நாளை புத்தக திருவிழா துவக்கம்

தேனி: தேனியில் மாவட்ட நிர்வாகம் சார்பில் 3ம் ஆண்டு புத்தகத்திருவிழா நாளை(மார்ச் 23) துவங்குகிறது.பழனிசெட்டிபட்டி மேனகா மில் மைதானத்தில் நாளை மாலை 4:00 மணிக்கு புத்தக திருவிழா துவக்க விழா நடக்கிறது. கலெக்டர் ரஞ்ஜீத்சிங் தலைமை வகிக்கிறார். அமைச்சர் பெரியசாமி துவங்கி வைக்கிறார். இவ்விழா மார்ச் 23 முதல் மார்ச் 30 வரை எட்டு நாட்கள் நடக்கிறது. தினமும் பல்வேறு தலைப்புகளில் இலக்கிய அரங்கம், சிந்தனை அரங்கங்களில் உள்ளூர், பிரபல பேச்சாளர்கள் பங்கேற்கின்றனர். பள்ளி மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள், உணவு ஸ்டால்கள், தனி பார்க்கிங் வசதி உள்ளிட்டவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விழா நடைபெறும் பகுதியில் பஸ்கள் நின்று செல்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள், மாணவர்கள் புத்தகத்திருவிழாவில் பங்கேற்று பயனடையுமாறு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். புத்தக திருவிழா ஒருங்கிணைப்பு பணிகளை பி.ஆர்.ஓ., நல்லதம்பி செய்து வருகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை