உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி /    குப்பை தேங்கி நாறுது தேனி

   குப்பை தேங்கி நாறுது தேனி

தேனி: தேனி நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளன. இங்கு 80ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் வசிக்கின்றனர். நகராட்சி சார்பில் குப்பை சேகரிக்கப்பட்டு, மக்கும், மக்காத குப்பையாக பிரித்து மறுசுழற்சி செய்யப்படுகிறது. ஆனால், கடந்த சில வாரங்களாக சுகாதார பணிகளுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனங்கள் பழுதடைந்துள்ளதால் பலவாகனங்கள் பயன்படுத்த முடியவில்லை. இதனால் நகர்பகுதியில் ஆங்காங்கே தெருக்களில் குப்பை தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. இதில் கால்நடைகள், நாய்கள் குப்பையை ரோட்டில் இறைப்பதால் பொதுமக்கள் பாதிப்பிற்கு உள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது. தேனி நகர்பகுதி சுகாதார சீர்கேட்டால் நகரில் பல பகுதிகள் நாறுகிறது என சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை