மேலும் செய்திகள்
பொறுப்பேற்பு
05-Sep-2025
தேனி: தேனி அல்லிநகரம் நகராட்சி கமிஷனராக பார்கவி நியமனம் செய்து நகராட்சி நிர்வாகத்துறை இயக்குநர் மதுசூதனன்ரெட்டி உத்தரவிட்டுள்ளார். போடி தேர்வு நிலை நகராட்சி கமிஷனராக இருந்த பார்கவி பதவி உயர்வில் தேனி சிறப்பு நிலை நகராட்சி கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார். தேனி நகராட்சி கமிஷனராக இருந்த ஏகராஜ் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையை தொடர்ந்து அவர் இரு மாதங்களுக்கு மேலாக மருத்துவ விடுப்பில் இருந்தார். கொடைக்கானல் நகராட்சி கமிஷனர் சங்கர் தேனி நகராட்சியை கூடுதல் பொறுப்பாக கவனித்து வந்தார்.
05-Sep-2025